< Back
தேசிய செய்திகள்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

தினத்தந்தி
|
13 Nov 2024 10:37 AM IST

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.

மும்பை,

சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று 1 பைசா சரிந்து ரூ.84.40-ஆக இருக்கிறது. நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.385 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.84.40ஆக சரிந்துள்ளது.

வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து 10வது நாளாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு முடிவே இதற்கு காரணம் என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துவதற்கு அந்நியச் செலாவணிச் சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட்டது. அதுபோல, இப்போதும் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடையுமானால், இம்முறையும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மாறாக இந்திய பங்குச்சந்தையானது கடும் சரிவை சந்தித்து வருகிறது.

மேலும் செய்திகள்