< Back
தேசிய செய்திகள்
திருப்பதி மலைப்பாதையில் சரிந்து விழும் பாறைகள்.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
தேசிய செய்திகள்

திருப்பதி மலைப்பாதையில் சரிந்து விழும் பாறைகள்.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

தினத்தந்தி
|
12 Dec 2024 3:47 PM IST

மலைப்பாதையில் பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருமலை,

திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பக்தர்கள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும், தொடர் மழை காரணமாக கடந்த சில தினங்களாக திருப்பதி மலை பாதையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2வது மலைச்சாலையில் ஹரிணி நிழற்பந்தல் அருகே பாறைகள் சரிந்து விழுந்தது. மேலும், தொடர் மழையால் திருப்பதி மலை பாதைகளில் பாறை சரிந்து விழுவதற்கான வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே மலைப்பாதையில் பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்