< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
மணிப்பூரில் ராக்கெட் குண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்

29 Jan 2025 1:58 PM IST
மணிப்பூரில் 6 ராக்கெட் குண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூரின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டத்தின் ஹெங்லெப் காவல் நிலைய பகுதிக்குள் உள்ள லோயிலம்கோட் மற்றும் நாலோன் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நேற்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின்போது கிராம சாலையின் பொதுப் பகுதியிலிருந்து பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் 6 ராக்கெட் குண்டுகள் மற்றும் அதை ஏவக்கூடிய லாஞ்சர் ஒன்று மற்றும் ஒரு நாட்டு மோர்ட்டார் ஆயுதம் ஆகியவற்றை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். இத்துடன், 7.62 மி.மீ குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.