< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தர பிரதேச சாலை விபத்தில் 4 பேர் பலி
|17 Dec 2024 4:38 PM IST
உத்தர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் யமுனா விரைவு சாலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இரண்டு கார்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் நொய்டாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்கள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.