
குடியரசு தின விழா: கடமைப் பாதையில் கிடந்த குப்பையை அகற்றிய பிரதமர் மோடி

குடியரசு தின விழாவின்போது கடமைப் பாதையில் கிடந்த குப்பையை பிரதமர் மோடி அகற்றினார்.
புதுடெல்லி,
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது . 76-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் நடைபெற்றது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா பங்கேற்றார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை வரவேற்பதற்காக சென்றார். அப்போது கடமைப் பாதையில் குப்பை பொருள் கிடப்பதை கண்ட பிரதமர் மோடி, உடனடியாக அந்த குப்பையை எடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'தூய்மை இந்தியா' திட்டம் குறித்து நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், குடியரசு தின விழாவில் அவராகவே முன்வந்து குப்பையை அகற்றியது 'தூய்மை இந்தியா' திட்டத்தின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களிடம் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.