< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்
|28 May 2024 4:58 PM IST
கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தற்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவின் கோட்டயம் , எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.