< Back
தேசிய செய்திகள்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம்; மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்தது மத்திய அரசு
தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம்; மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்தது மத்திய அரசு

தினத்தந்தி
|
21 Feb 2025 9:45 PM IST

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது.

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் திருத்தம் செய்துள்ளது. முன்னதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவை என்ற நடைமுறை இருந்து வந்தது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது. இதன்படி மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்கலாம். தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்க அனுமதி கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா? மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும். மாநில அரசு ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்