< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான்: கட்டுமான தளத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி
தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: கட்டுமான தளத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி

தினத்தந்தி
|
28 Nov 2024 5:06 PM IST

கட்டுமான தளத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள போஷானா கிராமத்தில் ஒரு பள்ளியில் நடந்த கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் கூற்றுப்படி, அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மோகன் லால், பைரா ராம் மாற்றும் பீராம் ராம் ஆகியோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. காயமடைந்த மற்றொரு தொழிலாளி ஜெகதீஷ் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்