< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்

தினத்தந்தி
|
31 Aug 2024 5:00 PM IST

ராகுல் காந்தி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார்.

டெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 3 நாட்கள் பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார்.

அடுத்த மாதம் 8ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டெல்லஸ் நகருக்கு செல்லும் ராகுல் காந்தி டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

அதன்பின்னர், தொழில்நுட்ப வல்லுநர்கள், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உள்பட பல்வேறு தரப்பினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.

டெக்சாஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி 9ம் தேதி வாஷிங்டன் செல்கிறார். வாஷிங்டனில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். மேலும், தேசிய பத்திரிக்கையாளர் மன்றத்திலும் ராகுல் காந்தி உரையாடுகிறார். 10ம் தேதியும் வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ராகுல் காந்தி 3 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அன்று இரவே இந்தியா திரும்ப உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்