பஞ்சாப் எம்.பி. அம்ரித்பாலின் சகோதரர் போதைப்பொருளுடன் கைது
|தனது மகன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானது என்று பஞ்சாப் எம்பி அம்ரித்பாலின் தந்தை தெரிவித்துள்ளார்.
சண்டிகார்,
பஞ்சாபின் கதூர் சாஹிப் தொகுதி எம்.பி.யும், காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கின் சகோதர் ஹர்பிரீத் சிங். ஹர்பிரீத்தும் அவரது கூட்டாளி லவ்பிரீத் சிங் உள்பட 3 பேரை போதைப்பொருளுடன் பில்லூரில் உள்ள சோதனை சாவடியில் ஜலந்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹர்பிரீத் சிங் மற்றும் லவ்ப்ரீத் சிங் ஆகியோரின் மருத்துவ சோதனையில் நேர்மறையான முடிவு கிடைத்துள்ளதாக ஜலந்தர் மூத்த காவல் கண்காணிப்பாளர் அங்கூர் குப்தா தெரிவித்தார். அவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில் லூதியானாவை சேர்ந்த சந்தீப் அரோரா என்பவரிடம் போதைப்பொருள் வாங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து அம்ரித்பால் சிங்கின் தந்தை டார்செம் சிங் கூறுகையில், தனது மகன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், இது எங்களது குடும்பத்தை அவதூறு செய்யும் சதி என்றும் அவர் தெரிவித்தார்.