< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே சீன டிரோன் கண்டெடுப்பு
தேசிய செய்திகள்

பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே சீன டிரோன் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
17 Oct 2024 7:18 AM IST

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் கண்டெடுக்கப்பட்டது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு டிரோன் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப் பகுதி அருகே உள்ள வயல்வெளிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது பாதி உடைந்த நிலையில் கிடந்த டிரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல் கடந்த 13-ந்தேதி, எல்லை அருகே சீன டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கண்டெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
மேலும் செய்திகள்