< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்: எல்லை தாண்டி வந்த டிரோன், போதைப்பொருளை பறிமுதல் செய்த எல்லை பாதுகாப்பு படை
தேசிய செய்திகள்

பஞ்சாப்: எல்லை தாண்டி வந்த டிரோன், போதைப்பொருளை பறிமுதல் செய்த எல்லை பாதுகாப்பு படை

தினத்தந்தி
|
21 Dec 2024 9:45 PM IST

இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் மற்றும் போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே கிராமத்தின் வயல்வெளி பகுதியில் விழுந்து கிடந்த டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர். மேலும் அந்த டிரோனுடன் 544 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் பொட்டலம் ஒன்றையும் அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

இது எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்துள்ளது என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதே போல், பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கர் பைனி மாவட்டத்திலும், வயல்வெளியில் கிடந்த போதைப்பொருள் பொட்டலம் ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இவை இந்திய எல்லைக்குள் யாருக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்