< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் போதைப்பொருள் பறிமுதல்
தேசிய செய்திகள்

பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் போதைப்பொருள் பறிமுதல்

தினத்தந்தி
|
30 Nov 2024 9:34 AM IST

பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் 1.132 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதிகளுக்குள் டிரோன் மூலம் போதைப்பொருளை கடத்துவதற்கான முயற்சிகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதனை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பனிமூட்டத்தை சாதமாக பயன்படுத்தி எல்லை வழியாக டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தும் முயற்சிகள் அதுகரித்துள்ளன. அந்த வகையில் பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் 1.132 கிலோ போதைப்பொருள் ஆகியவற்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமிர்தசரஸ் மாவட்டம் மகாவா கிராமம் அருகே எல்லையை தாண்டி வந்த டிரோன் ஒன்று அங்குள்ள வயல்வெளியில் விழுந்ததாகவும், அதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டறிந்து கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் 560 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே போல் பஞ்சாபின் தார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்தில் வயல்வெளியில் ஒரு டிரோன் கண்டெடுக்கப்பட்டது. அதில் இருந்த 572 கிராம் போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். எல்லை பாதுகாப்பு படையின் தீவிர கண்காணிப்பின் மூலம் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்