< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சாவர்க்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்திக்கு ஜாமீன்
|11 Jan 2025 5:19 AM IST
சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மும்பை,
காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி கடந்த 2023ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் விநாயக் சாவர்க்கர் குறித்து பேசினார். அவரது பேச்சு சர்ச்சையானது.
இதனிடையே, சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சாவர்க்கரின் சகோதரர் வழி பேரனான சத்யாகி சாவர்க்கர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது புனே கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று புனே கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.