< Back
தேசிய செய்திகள்
ஜம்மு: புல்வாமா குண்டுவெடிப்பு குற்றவாளி மாரடைப்பால் மரணம்

File image

தேசிய செய்திகள்

ஜம்மு: புல்வாமா குண்டுவெடிப்பு குற்றவாளி மாரடைப்பால் மரணம்

தினத்தந்தி
|
24 Sept 2024 5:06 PM IST

புல்வாமா பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ந்தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

புல்வாமா குண்டுவெடிப்பில் தீவிரவாதிகளுக்கு தளவாட உதவி வழங்கியதாக ஹாஜிபால் லால்ஹரில் வசித்து வந்த பிலால் அகமது குச்சாய் (27) என்பவரை கடந்த 2020ம் ஆண்டு போலீசார் கைது செய்து கிஷ்த்வார் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிலால் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17ம் தேதி ஜம்முவில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிலாலின் உடல் பிரேத பரிசோதனை மற்றும் சட்ட முறைமைகளுக்காக பிணவறைக்கு மாற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்