< Back
தேசிய செய்திகள்
மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து கூறிய பிரியங்கா
தேசிய செய்திகள்

மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து கூறிய பிரியங்கா

தினத்தந்தி
|
31 Oct 2024 12:47 PM IST

நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இருளை நீக்கி ஒளியை கொடுக்கும் பண்டிகையான தீபாவளி பண்டிகையை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வகைகளை உண்டு மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,

"இருளுக்கு எதிராக ஒளி நிறைந்த தீபத்தின் வெற்றித் திருவிழா. அநீதி, பொய் மற்றும் ஆணவத்துக்கு மத்தியில் நீதி, உண்மை மற்றும் அடக்கத்தின் வெற்றித் திருவிழா. வண்ணங்கள், விளக்குகள் மற்றும் மகிழ்ச்சியின் திருவிழா. தூய்மை மற்றும் வழிபாட்டுக்கான நேரம் இது. ஒரு பருவம் முடிந்து அடுத்த பருவத்தை அன்புடன் வரவேற்கும் ஒரு சிறந்த பண்டிகை. நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, மலையாளத்திலும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்