< Back
தேசிய செய்திகள்
வயநாடு இடைத்தேர்தல்:  4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி
தேசிய செய்திகள்

வயநாடு இடைத்தேர்தல்: 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி

தினத்தந்தி
|
23 Nov 2024 11:58 AM IST

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.

வயநாடு,

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.

இதன்படி காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்பட்டது. இதில் துவக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்த பிரியங்கா காந்தி சுமார் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளர். இரண்டாவது இடத்தில் ஆளும் இடது சாரி முன்னணி வேட்பாளர் சத்யன் உள்ளார். பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறார் பிரியங்கா காந்தி.

வயநாடு மக்களவை தொகுதி-வெற்றி நிலவரம்:-

பிரியங்கா காந்தி -காங்கிரஸ் - 6,22,338 (4 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி)

சத்யன்; சி.பி.ஐ - 2,11,407

நவ்யா: பா.ஜனதா- 1,09,939

மேலும் செய்திகள்