< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரிக்கு எதிராக சிறப்புரிமை தீர்மானம் - 60 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரிக்கு எதிராக சிறப்புரிமை தீர்மானம் - 60 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து

தினத்தந்தி
|
12 Dec 2024 5:29 PM IST

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜுவிற்கு எதிராக சிறப்புரிமை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மாநிலங்களவை தலைவர் கெஜதீப் தன்கர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி, அவர் மீது 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தனர். இது தொடர்பான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ரிஜிஜுவிற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சகாரிகா கோஸ் இன்று மாநிலங்களவையில் சிறப்புரிமை தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். இதில் 60 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இது குறித்து சகாரிகா கோஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு, நாடாளுமன்றத்தை சிறப்பாக வழிநடத்துவதை தவிர்த்துவிட்டு, எதிர்க்கட்சி எம்.பி.க்களை அவமதிக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானது அல்ல" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்