< Back
தேசிய செய்திகள்
பயணிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவரை அடித்துக்கொன்ற தனியார் பஸ் ஊழியர்கள்
தேசிய செய்திகள்

பயணிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவரை அடித்துக்கொன்ற தனியார் பஸ் ஊழியர்கள்

தினத்தந்தி
|
9 March 2025 1:11 PM IST

பயணிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவரை தனியார் பஸ் ஊழியர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வடகிமனா பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் அல்தீப். இவர் நேற்று வடகிமனா பஸ் நிலையத்தில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு தனியார் பஸ் ஊழியர்கள் 3 பேர், அப்துல் அல்தீப்பின் ஆட்டோவை துரத்தி சென்று இடைமறித்தனர்.

பின்னர், ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய அப்துலை அந்த 3 பேரும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அப்துல் தனது ஆட்டோவிலேயே மலப்புரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

வாகன நிறுத்துமிடத்தில் ஆட்டோவை நிறுத்திய அப்துல் மருத்துவமனைக்கு நடத்து சென்றுள்ளார். நடந்து செல்லும்போது நிலைகுலைந்த அப்துல் கீழே சுருண்டு விழுந்தார்.

உடனடியாக விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள், அப்துலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அப்துல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த அப்துல் உயிரிழந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திய தனியார் பஸ் ஊழியர்கள் முகமது நிஷாந்த், சுஜிஸ், சிஜு ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைந்தனர்

மேலும் செய்திகள்