< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து
|31 Oct 2024 8:33 AM IST
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தீபாவளித் திருநாளான இன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
"நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ வாழ்த்துகிறேன். அனைவருக்கும் லட்சுமி மற்றும் விநாயகரின் அருள் கிடைக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.