வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
|வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
திருவனந்தபுரம்,
Live Updates
- 10 Aug 2024 3:08 PM IST
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
- 10 Aug 2024 2:31 PM IST
வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். சூரல்மலை பகுதியில் இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலம் வழியாக நடந்து சென்ற பிரதமர் மோடி நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார்.
- 10 Aug 2024 12:16 PM IST
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
- 10 Aug 2024 11:59 AM IST
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில், மத்திய அமைச்சரவை குழு ஆய்வு செய்தது. அப்போது மத்திய அமைச்சரவை குழுவை சந்தித்து, நிவாரண பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கேரள அரசின் அமைச்சரவை குழு வலியுறுத்தி உள்ளது. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் வயநாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.
- 10 Aug 2024 11:29 AM IST
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி கேரளா வந்தடைந்தார். தனி விமானம் மூலம் கண்ணூர் வந்த பிரதமர் மோடியை கேரள ஆளுநர், முதல் மந்திரி ஆகியோர் வரவேற்றனர். கண்ணூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வயநாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார்.
- 10 Aug 2024 9:59 AM IST
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் அவர் காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் பறந்தபடி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வயநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
பிரதமரின் இந்த பயணத்தின்போது, கேரளா கவர்னர் ஆரிப் முகமது, முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள். பிரதமரின் வயநாடு பயணத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.