< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
19 Jun 2024 10:32 AM IST

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

பாட்னா,

பீகார் மாநிலம் ராஜ்கீரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய வளாகம் நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த புதிய வளாகத்திற்கு உள்ளே சோலார் மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் 17 நாடுகளின் தூதர்கள் கலந்து கொள்கின்றனர். அதோடு நாளந்தாவின் பழங்கால இடிபாடுகளையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். பழங்கால நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.நா. பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்