< Back
தேசிய செய்திகள்
அத்வானி இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

அத்வானி இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

தினத்தந்தி
|
8 Nov 2024 9:16 PM IST

அத்வானி இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ.க. முன்னாள் தலைவருமான அத்வானி, இன்று தனது 97-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு பா.ஜ.க. தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தேசத்திற்கு அவர் செய்த சிறந்த சேவைக்காக இந்த ஆண்டு அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது கூடுதல் சிறப்பு. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார். அவருடைய அறிவுத்திறன் மற்றும் வளமான நுண்ணறிவுக்காக அவர் எப்போதும் மதிக்கப்படுகிறார். பல ஆண்டுகளாக அவருடைய வழிகாட்டுதலைப் பெற்றதில் நான் அதிர்ஷ்டசாலி. அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அத்வானி இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்