< Back
தேசிய செய்திகள்
மனதின் குரல் நிகழ்ச்சியில்  சென்னை அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு
தேசிய செய்திகள்

மனதின் குரல் நிகழ்ச்சியில் சென்னை அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு

தினத்தந்தி
|
24 Nov 2024 8:41 PM IST

சென்னையை சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்பான முயறசிகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. அதில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

நீங்கள் அனைவரும் உங்களின் சிறுவயதில் சிட்டுக்குருவியை வீட்டுக் கூரைகளிலோ, மரங்களிலோ கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள், ஆனால் இன்று நகர்ப்புறங்களில் மிக அரிதாகவே சிட்டுக்குருவி காணப்படுகிறது. பெருகிவரும் நகர்ப்புறங்கள் காரணமாக சிட்டுக்குருவி நம்மை விட்டுத் தொலைவாகச் சென்றுவிட்டது. ஆனாலும், சிட்டுக்குருவியை மீண்டும் மீட்டெடுக்க, சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்பான முயறசிகளை எடுத்து வருகிறது. பள்ளி குழந்தைகளைத் தங்கள் இயக்கத்தில் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார்கள். இந்த அமைப்பை சேர்ந்த சிலர், சிட்டுக்குருவிகள் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தவை என்பதைப் பள்ளிகளுக்குச் சென்று புரியவைக்கிறாரக்ள். சிட்டுக்குருவியின் கூட்டை எவ்வாறு அமைத்துக் கொடுப்பது என்பது தொடர்பாக பயிற்சிகளை அளிக்கிறார்கள். கூடுகள் அறக்கட்டளையின் இந்த முன்னெடுப்பு காரணமாக அருகாமை இடங்களில் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய இந்த கூடுகள் பெரும் உதவியாக உள்ளன" என்றர்.

மேலும் செய்திகள்