< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

கன்றுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி

தினத்தந்தி
|
14 Sept 2024 2:03 PM IST

கன்றுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, தனது வீட்டில் வளர்த்து வரும் பசு ஒன்று புதிதாக கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது'

"இது நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது - காவ் சர்வசுக் பிரதா. லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதம மந்திரி இல்லத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளார். பிரதமரின் இல்லத்தில், அன்பிற்குரிய தாய் பசு, நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதனால், அதற்கு 'தீப்ஜோதி' என்று பெயர் வைத்துள்ளேன்."

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்