3 நாடுகள் சுற்றுப்பயணம் நிறைவு: இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
|வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு புறப்பட்டார்.
புதுடெல்லி,
நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக சென்ற பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார்.
நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த 16 ஆம் தேதி புறப்பட்டு சென்றார். 17 ஆண்டுகளில் நைஜீரியாவுக்கு இந்திய பிரதமர் சென்றது இதுவே முதல்முறையாகும். நைஜீரியாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய தேசிய விருதான 'கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர் வழங்கப் பட்டது.
நைஜீரியா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி,பிரேசில் சென்றார். பிரேசிலில் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பின்னர் கயானா சென்றார். கயானா நாட்டின் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து ஜார்ஜ் டவுன் நகரில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். இந்த நிலையில், தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டுள்ளார்.