< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதா அலுவலகம் செல்கிறார் பிரதமர் மோடி: ஆட்சி அமைப்பது குறித்து  அறிவிக்க வாய்ப்பு
தேசிய செய்திகள்

பா.ஜனதா அலுவலகம் செல்கிறார் பிரதமர் மோடி: ஆட்சி அமைப்பது குறித்து அறிவிக்க வாய்ப்பு

தினத்தந்தி
|
4 Jun 2024 4:21 PM IST

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திற்கு இன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதியிலும் பா.ஜனதா முன்னிலை வகிக்கிறது. உத்தர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜனதா கூட்டணியை விட இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கிறது.

பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கையில் பிரதமர் மோடி இறங்கியுள்ளார். கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பு அப்போது வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும் செய்திகள்