3 குழந்தைகளை பறி கொடுத்த ஒரு வாரத்தில் கர்ப்பிணி பலி; காஷ்மீரில் சோகம்
|காஷ்மீரில் சிகிச்சை பலனின்றி கர்ப்பிணி பலியான சம்பவத்தில் தொடர்புடைய 5 டாக்டர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
ரஜோரி,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பதால் கொத்ரன்கா பகுதியை சேர்ந்தவர் ரஜிம் அக்தர் (வயது 35). 5 மாத கர்ப்பிணியான இவர் உடல்நல பாதிப்புக்காக சிகிச்சை பெறுவதற்காக, முதலில் கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன்பின்னர், ரஜோரியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் உறவினர்கள் அவரை சேர்த்தனர்.
இந்நிலையில், கர்ப்பிணியான அக்தர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 டாக்டர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர, துணை மருத்துவர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் 10 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 5 டாக்டர்களும் அவசர வார்டில் இரவு பணியில் இருந்துள்ளனர்.
அந்த பெண் உயிரிழப்பதற்கு முன் கடந்த வாரம் மர்ம பாதிப்புகளால் அவருடைய 3 குழந்தைகள் உயிரிழந்து விட்டனர். இந்த சோகத்தில் இருந்து வெளியே வருவதற்குள் அவர் உயிரிழந்து விட்டார்.