< Back
தேசிய செய்திகள்
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை
தேசிய செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

தினத்தந்தி
|
4 Jun 2024 8:54 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் ஹசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை பெற்றுள்ளார்.

பெங்களூர்,

கர்நாடகாவின் ஹசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா தேர்தல் முடிந்ததும் பாலியல் வழக்குகளில் சிக்கினார். ஜெர்மனியில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு திரும்பினார்.

தற்போது கைது செய்யப்பட்டு பிரஜ்வல் ரேவண்ணா போலீஸ் காவலில் உள்ளார். இந்த நிலையில் தான் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை பெற்றுள்ளார். ஹசன் தொகுதியில் ரேவண்ணாவை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் ஷ்ரேயாஸ் படேல் களத்தில் உள்ளார்.

மேலும் செய்திகள்