< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரஜ்வல் ரேவண்ணாவை தேவகவுடாவே வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்- முதல்-மந்திரி சித்தராமையா
|23 May 2024 10:01 PM IST
பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததே தேவகவுடா தான் என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியாவுக்கு திரும்பி போலீசார் முன்பாக சரண் அடைய வேண்டும். இது எனது கடைசி எச்சரிக்கை என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்து இருந்தார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருப்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தே தேவகவுடா தான். எனது அடிப்படையில் அவரே அனுப்பி வைத்திருக்கலாம். இந்த எச்சரிக்கை விடுப்பது எல்லாம் மக்களிடம் அனுதாபம் சம்பாதிக்க தேவகவுடா செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.