< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மக்களவை தேர்தலில் மோசமான செயல்பாடு; பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளுடன் மாயாவதி ஆய்வுக் கூட்டம்
|23 Jun 2024 12:28 PM IST
மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மோசமான செயல்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மாயாவதி ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்.
லக்னோ,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்தது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை ஒரு இடத்தில் கூட பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கான காரணம் குறித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.