< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல்
|20 Sept 2024 7:29 AM IST
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 50க்கும் மேற்பட்டோர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், பேருந்து நிலையத்திற்குள் உறங்கக்கூடாது என கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆதரவின்றி தங்கிய தங்களை பேருந்து நிலையத்தின் உள்ளே தங்கக்கூடாது எனக்கூறி போலீஸ் தாக்கி துரத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போலீசாரை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் பேருந்துகள் பேருந்து நிலையம் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.