< Back
தேசிய செய்திகள்
மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா சாதாரண மக்களின் சட்டை பாக்கெட்டை காலி செய்துள்ளது - கார்கே
தேசிய செய்திகள்

மோடியின் 'வளர்ச்சியடைந்த இந்தியா' சாதாரண மக்களின் சட்டை பாக்கெட்டை காலி செய்துள்ளது - கார்கே

தினத்தந்தி
|
27 Feb 2025 3:54 PM IST

பிரதமர் மோடியின் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ குறிப்பிட்ட கோடீஸ்வரர்களை மட்டும் மேம்படுத்தி உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

100 கோடி இந்தியர்களுக்கு செலவழிக்க கூடுதல் வருமானம் இல்லை.

நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம் நுகர்வைச் சார்ந்துள்ளது.

ஆனால் இந்தியாவின் முதல் 10 சதவீதம் பேர் மட்டுமே பொருளாதார வளர்ச்சியையும் நுகர்வையும் இயக்குகிறார்கள். 90 சதவீதம் பேர் அடிப்படை அன்றாடத் தேவைகளை கூட வாங்க முடியாமல் உள்ளனர்.

இந்தியாவின் வரி செலுத்தும் மக்கள்தொகையில் நடுத்தர 50 சதவீதம் பேர் கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைந்த அல்லது ஊதிய வளர்ச்சியைக் கண்டுள்ளனர். கிராமப்புற ஊதியங்கள் எதிர்மறையான வளர்ச்சியைக் காண்கின்றன.

செல்வ செறிவு விரிவடைகிறது, மேலும் உங்கள் கொள்கைகள் அனைவருக்கும் வருமானத்தை விநியோகிக்கத் தவறிவிட்டன.

கடந்த 10 ஆண்டுகளில் தேங்கி நிற்கும் ஊதியங்கள், தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்த நுகர்வு ஆகியவை -

1. வீட்டு சேமிப்பு 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது.

2. வருமான சமத்துவமின்மை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது.

3. வீட்டுக் கடன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

உலகளாவிய கட்டணப் போர் மற்றும் வர்த்தகத் தடைகளை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.

வேலையின்மை நமது இளைஞர்களால் தாங்க முடியாததாகிவிட்டது.

பட்ஜெட் அறிவிப்புகள் வெறும் டம்ப் ஸ்க்விப் மாதிரி ஆகிவிட்டது.

உங்கள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற பெயரிலான செயல்பாடுகள், சாதாரண மக்களின் சட்டை பாக்கெட்டை காலி செய்து, குறிப்பிட்ட கோடீஸ்வரர்களை மட்டுமே மேம்படுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்