< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி
தேசிய செய்திகள்

4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
30 Jun 2024 10:45 AM IST

'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

புதுடெல்லி,

'மனதின் குரல்' (மன் கீ பாத்) என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, இந்தியாவின் பிரதமராக 3-வது முறை மோடி பதவியேற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி வானொலி மூலம் இன்று முதல் மீண்டும் ஒலிபரப்பப்படுகிறது. 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

அகில இந்திய வானொலி, 'நமோ' செயலி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் இன்று காலை 11 மணி முதல் நேரலையில் பிரதமரின் உரையை கேட்கலாம்.

கடைசியாக கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வரை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்