< Back
தேசிய செய்திகள்
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
தேசிய செய்திகள்

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

தினத்தந்தி
|
21 July 2024 10:05 AM IST

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி கார்கேவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பதிவில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்