< Back
தேசிய செய்திகள்
அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
தேசிய செய்திகள்

அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

தினத்தந்தி
|
22 Oct 2024 8:43 AM IST

மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு, பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அமித்ஷாவுக்கு, பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பிறந்தநாள் வாழ்துகள் அமித்ஷா ஜி. கடினமாக உழைக்கும் தலைவர் அமித்ஷா. பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவர் விக்சித் பாரதத்தின் பார்வையை நனவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்