< Back
தேசிய செய்திகள்
உண்மைகள் வெளிவந்துள்ளன.. - சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
தேசிய செய்திகள்

"உண்மைகள் வெளிவந்துள்ளன.." - சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

தினத்தந்தி
|
17 Nov 2024 4:57 PM IST

சாமானியர்கள் பார்க்கும் வகையில், உண்மை வெளிவருவது நல்லது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தின் மூலம், சாமானியர்கள் பார்க்கும் வகையில் உண்மைகள் வெளிவந்துள்ளன.

ஒரு போலியான கதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். இறுதியில் உண்மைகள் வெளிவந்துவிடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் வெளியான படத்தின் டிரெய்லரின் வீடியோவுடன் தன்னை இணைத்து வெளியிட்ட எக்ஸ் வலைதள பயனாளருக்கு பிரதமர் மோடி இவ்வாறு பதிலளித்தார். ஷோபா கபூர், ஏக்தா ஆர் கபூர், அமுல் வி மோகன் மற்றும் அன்ஷுல் மோகன் ஆகியோர் தயாரித்த "தி சபர்மதி ரிப்போர்ட்" படத்தை தீரஜ் சர்னா இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரிதி டோக்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 27, 2002 அன்று குஜராத்தின் கோத்ரா ரெயில்நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரசின் S-6 பெட்டி எரிக்கப்பட்டு, அயோத்தியிலிருந்து திரும்பிய 59 இந்து பக்தர்கள் எரித்துக் கொல்லப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது 'சபர்மதி அறிக்கை'. இந்த சம்பவம் அந்த ஆண்டு குஜராத்தில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்