< Back
தேசிய செய்திகள்
அமெரிக்காவில் கூட அதானியின் ஊழலை  பிரதமர் மோடி மறைக்கிறார்: ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

அமெரிக்காவில் கூட அதானியின் ஊழலை பிரதமர் மோடி மறைக்கிறார்: ராகுல் காந்தி

தினத்தந்தி
|
15 Feb 2025 2:12 AM IST

அமெரிக்காவில் கூட மோடிஜி, அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்த நாட்டு ஜனாதிபதி டிரம்புடன் இது குறித்து பேசவில்லை என்றார். தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்கள் பேசுவது இல்லை என அவர் விளக்கம் அளித்்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'அதானி விவகாரம் குறித்து இந்தியாவில் நீங்கள் கேள்வி எழுப்பினால், மவுனமே பதிலாக இருக்கும். வெளிநாட்டில் கேள்வி கேட்டால், அது தனிப்பட்ட விவகாரமாகி விடும். அமெரிக்காவில் கூட மோடிஜி, அதானியின் ஊழல்களை மறைக்கிறார்' என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்