< Back
தேசிய செய்திகள்
போட்ஸ்வானா புதிய அதிபர் டுமா பொகோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து
தேசிய செய்திகள்

போட்ஸ்வானா புதிய அதிபர் டுமா பொகோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

தினத்தந்தி
|
3 Nov 2024 3:12 PM IST

போட்ஸ்வானா புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டுமா பொகோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி,

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு போட்ஸ்வானா. அந்நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் டுமா பொகோ தலையிலான ஜனநாயக மாற்றத்திற்கான குடை கூட்டணி வெற்றிபெற்றது. இதன் மூலம் போட்ஸ்வானாவில் 58 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்ற டுமா பொகோ போட்ஸ்வானாவின் 6வது அதிபராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், போட்ஸ்வானா புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டுமா பொகோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் , போட்ஸ்வானாவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டுமா பொகோவுக்கு வாழ்த்துகள். இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்