தேசிய செய்திகள்
திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
தேசிய செய்திகள்

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
9 Jan 2025 1:04 AM IST

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவெசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் நேற்று இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த இலவச தரிசன டோக்கன்களை வாங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவித்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் அடக்கம்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆந்திராவின் திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்