
பிரதமர் மோடி, கத்தார் அதிபர் இடையே பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி, கத்தார் அதிபர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
டெல்லி,
2 நாட்கள் அரசு முறை பயணமாக கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் பின் அகமதி அல்தானி நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அதிபர் அல்தானியை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். அல்தானி கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அதன்பின்னர், 10 ஆண்டுகள் கழித்து தற்போது 2வது முறையாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
இந்நிலையில், கத்தார் அதிபர் அல்தானி இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, கலாசாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, சர்வதேச அரசியல் சூழ்நிலை குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும், இரு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.