< Back
தேசிய செய்திகள்
மாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

மாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
15 Nov 2024 6:14 PM IST

பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

ராஞ்சி,

பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஜமுய் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேலும், பீகாரில் 6 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் நிகழ்ச்சியை முடிந்தபின் அங்கிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரி நகருக்கு பிரதமர் மோடி சென்றார். தியோகரியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை சொந்தமான விமானத்தில் பிரதமர் மோடி டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், பிரதமர் மோடி பயணிக்கவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், அவர் டெல்லிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருமணிநேரத்திற்கு மேலாக பிரதமர் மோடி தியோகரி விமான நிலையத்தில் காத்திருந்தார்.

பின்னர், டெல்லியில் இருந்து மாற்று விமானம் ஜார்க்கண்ட் வந்தது. தியோகரி விமான நிலையம் வந்த விமானப்படைக்கு சொந்தமான மாற்று விமானம் மூலம் பிரதமர் மோடி மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்