
வழிபாட்டுத் தலங்கள் சட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு தாக்கல்

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் மனுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் மனுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி இருந்த வழிபாட்டு தலங்களின் மதத் தன்மையை அப்படியே பராமரிக்க வேண்டும், அதன் தன்மையை மாற்றவோ, வழக்கு தொடரவோ கூடாது என்று வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 கட்டளையிடுகிறது. இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் 2, 3 மற்றும் 4 பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. ஆதரவு வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவுக்கு எதிராக, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நாடு முழுவதும் திறம்பட செயல்படுத்த வேண்டும் எனக்கோரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது சார்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்கறிஞர் அணி இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.