< Back
தேசிய செய்திகள்
கங்கையில் புனித நீராட குவிந்த மக்கள் - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
தேசிய செய்திகள்

கங்கையில் புனித நீராட குவிந்த மக்கள் - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
15 Nov 2024 8:55 PM IST

பாட்னாவில் கங்கை நதியில் புனித நீராட மக்கள் குவிந்ததால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாட்னா,

கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கா காட் பகுதியில், கங்கையில் நீராட மக்கள் குவிந்தனர். முன்னதாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். இருப்பினும் அளவுக்கு அதிகமாக கூட்டம் குவிந்ததால் ஏற்பாடுகள் சீர் குலைந்தன. ஏராளமானோர் கார்களிலும், பஸ்களிலும் தங்கள் குடும்பத்தோடு புனித நீராடுவதற்காக வருகை தந்தனர்.

இதனால் பாட்னாவின் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பல இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் வாகன நெரிசலை சரிசெய்ய போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து படிப்படியாக போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

மேலும் செய்திகள்