நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25-ம் தேதி தொடங்குகிறது
|நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.25-ல் தொடங்குகிறது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். மேலும் இந்த குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20 வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் வரும் 25-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் நவ.26-ம் தேதி நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என பதிவிட்டுள்ளார்.
இந்த குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மற்றும் வக்பு (திருத்தம்) மசோதா, 2024 ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த இரண்டுக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், கூட்டத்தொடரில் கடும் அமளி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.