< Back
தேசிய செய்திகள்
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற நபர்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற நபர்

தினத்தந்தி
|
1 Nov 2024 1:17 AM IST

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

பால்கர்,

மராட்டியத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள நரிங்கி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வப்னில் தாவ்ரே (30 வயது). இவரது மனைவி ரோஷினி (28 வயது). இந்த தம்பதிக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. ரோஷினி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர். இந்த நிலையில் அவர் ஸ்வப்னில் தாவ்ரேவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். சமீபகாலமாக ஸ்வப்னில் தாவ்ரேக்கு மனைவி ரோஷினியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதேபோல் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்வப்னில் தாவ்ரே மனைவி ரோஷினியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரோஷினி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த ரோஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஸ்வப்னில் தாவ்ரேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்