< Back
தேசிய செய்திகள்
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு எவ்வளவு?  மத்திய அரசு வெளியிட்ட தகவல்
தேசிய செய்திகள்

கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு எவ்வளவு? மத்திய அரசு வெளியிட்ட தகவல்

தினத்தந்தி
|
21 March 2025 1:21 AM IST

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதற்கான செலவு ரூ.22.89 கோடி என கூறப்பட்டு இருந்தது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வெளியிடுமாறு மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.இதற்கு மத்திய வெளியுறவு இணை மந்திரி பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கடந்த 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வழங்கினார்.

அதன்படி இந்த 3 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட பயணங்களுக்கான மொத்த செலவு சுமார் ரூ.258 கோடி என அவர் தெரிவித்தார்.இதில் முக்கியமாக, 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதற்கான செலவு ரூ.22.89 கோடி என கூறப்பட்டு இருந்தது. அதேநேரம் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது.முன்னதாக 2023-ல் ஜப்பான் பயணத்துக்கு ரூ.17.19 கோடியும், 2022-ல் நேபாள பயணத்துக்கு ரூ.80 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்