< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

தினத்தந்தி
|
12 Dec 2024 1:38 PM IST

நாட்டை விற்க விடமாட்டோம் என்ற பதாகைகளை ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

சூரிய மின்சார விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது, நாட்டை விற்க விடமாடோம் என்ற பாதகைகளை ஏந்தியும், பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்