< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தினத்தந்தி
|
8 Aug 2024 12:55 PM IST

காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திடீர் போராட்டம் நடத்தினர். வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை குறைக்க கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளின் விலையை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

மேலும் செய்திகள்