< Back
தேசிய செய்திகள்
வக்பு குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
தேசிய செய்திகள்

வக்பு குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

தினத்தந்தி
|
28 Oct 2024 3:02 PM IST

டெல்லி வக்பு வாரியத்தின் விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு இன்று கூடியது. அதில் டெல்லி வக்பு வாரியத்தின் விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்தனர். ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங், திமுகவின் முகமது அப்துல்லா, காங்கிரசின் நசீர் உசேன் முகமது ஜாவேத் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கமிட்டியின் முன் ஆஜரான டெல்லி வக்பு வாரிய நிர்வாகியும், எம்.சி.டி. ஆணையருமான அஸ்வினி குமார், வக்பு வாரியத்தின் ஆரம்ப அறிக்கையை டெல்லி முதல்-மந்திரியின் அனுமதியின்றி முற்றிலும் மாற்றியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்